பானை உடைத்தல் (உறியடித்தல்)
வருடம்தோறும் பொங்கல் விழாவின் இறுதி நாள், மாலையில் நடைபெறும் பானை உடைத்தல் (உறியடித்தல்) ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கும். ஊரில் சிறப்பாக அன்று முதல் வாலிபர்களிள் வீர விளையாட்டாக இது அமைத்திருகிறது. ஊரில் மூன்று நாட்கள் பொங்கல் விழா சிறப்பாக முடிவடைந்தது என்ற "கண் பேர்" போக த்ரிஷ்டிக்கு செய்யப்படும் ஒரு "வீர" விளையாட்டு, முதல் நாள் பொங்கல் (சர்க்கரை பாயசம், பச்சரிசி பொங்கல்) விட்ட பானையில் தண்ணீருடன் சுண்ணாம்பு, மஞ்சள் சேர்த்து வரும் செந்நிற நீருக்குள் பூக்கள், வேப்ப இலை சேர்த்து கரைசல் செய்து, நன்றாக வடத்தினால் இறுக்க கட்டி ஊருக்கு வெளியே கட்டி வைப்பார்கள். இந்த "கண் பேர் " பானையை தயார் செய்வது ஒரு தனி குரூப்.
பானை உடைத்தல் என்பது எளிதான விஷயம் அல்ல, ஒரு 200 மீட்டர் தூரத்துக்கு முன்னர் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் கண்கள் பூவரசு இலையால் மறைத்து பின்னர் துவர்த்தால் (தலை முண்டு) இறுக்க கட்டப்படும். இருளை தவிர ஏதும் தெரியாது. கையில் நீளமான கம்புடன், இருள் சூழ்ந்த கண்களோடு பானை கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் இடத்திற்கு வீரர்களை அழைத்து வந்து, அவர்களை படாத, பாடு படுத்தி, பானையை உடைக்க வைப்பது நம் மக்களின் திறமை.
இந்த ஆண்டும் போட்டியில் இளம் சிங்கங்கள் களம் இறங்கின அன்பரசு, செந்தில் ஆனந்த், தனசேகர், சுனில் ஆகியோர், சுற்றி பார்த்த நம் மக்கள் ஏய்,,, அன்னா,, பாரு,,அடி.. கொஞ்சம் தள்ளி போ.. என்ற வசனங்கள் முழங்க போட்டி வெகு ஜோராய் நடந்தது. வீரர்களை உசுப்பேற்ற பானையில் இருந்து சிந்தும் தண்ணீர் போல் அவர்கள் மேல் தண்ணீரை ஊற்றி போட்டியை விறுவிறுப்பாகினர் பாஸ் ராஜேஷ் கண்ணன்.
நான்கு பேர் கொண்ட போட்டியில் தம்பி செந்தில் ஆனந்த்தின் கை வீச்சில் பானை உடைந்தது, . இந்த வருட 2017 பானை உடைத்தல் போட்டியின் நாயகன் ஆனான்.
![]() |
Group Selfie |
![]() |
Group Selfie |
![]() |
Group Selfie |
![]() |
Group Selfie |
![]() |
Group Selfie |
கண்ணன்
திறன்பேசி ஒளிப்படங்கள்
ராகுல் நாகராஜன்
ராஜேஷிபு
செந்தில் ஆனந்த்
மதன் ஐ
அன்பரசு
வெங்கடேஷ்
முஜிபு சதீஸ்
No comments:
Post a Comment