பொங்கல் விழா - மாபெரும் கபடி நிகழ்வு
2017 இல் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட நமது ஊர் கபடி போட்டி(15-01-2017) இரண்டாம் நாள் நடைபெற்றது
திருமணம் ஆன ஆண்களுக்கும், திருமணம் முடியாத கட்டிளம் காளைகளுக்கும் போட்டி நடை பெற்றது
திருமணம் ஆன அணியின் தலைவராக AV. கார்த்தியும், திருமணம் ஆகாத அணியின் தலைவராக S. ஸ்ரீ நிவாசனும் பங்கெடுத்தனர். போட்டியை பெரியப்பா P. ரெத்தினமணி துவங்கி வைத்தார்.
போட்டியின் நடுவர்களாக திரு.N. ராஜ்குமார் (Ex.Army ) மற்றும் M.கார்த்திக்குமார் ஆகியோர் சிறப்பித்தனர். மன்ற தலைவர் S.ராஜா மதிப்பெண் எழுதினார். பலத்த ஆரவாரத்தோடு, குழந்தைகளோடு ஊர் மக்களும், மகிழ்ச்சியோடு போட்டியை கண்டுகளித்தனர்.
படங்கள் இதோ..
 |
போட்டியின் துவக்கம், ஸ்ரீ நிவாஸன், பெரியப்பா ரெத்தினமணி, ராஜசிபு, வெங்கி, ராம்ஸ் |
 |
தினேஷ் அதிரடி Ride |
 |
விளையாட்டை கண்டு மகிழ்ந்த கூட்டத்தின் ஒரு பகுதியினர் |
 |
குமார் அண்ணனின் Speed Ride. நடுவர்கள் கார்த்திக்குமார் மற்றும் ராணுவ வீரர் ராஜ்குமார் |
 |
சுரேஷின் கள ஆட்டம் |
 |
பாஸ் ராஜேஷ் கண்ணனின் புயல் வேக Ride |
 |
வளச்சு பிடிச்சீட்டியளே .. மக்கா..... |
 |
எங்களை ஜெயிக்க முடியாது..! |
விடுவோமா நாங்கல்லாம்......அப்பவே அப்டி..
 |
ராம்ஸ் பிடியிலிருந்து பாயிண்ட் எடுக்கும் தினேஷின் அதிரடி |
 |
முஜுபு சதீஷின் ஒரு ரைடு |
 |
சீனிவாசன் இந்த உடும்பு பிடியிலிருந்து தப்ப முடியுமா ? |
 |
அனைவரும் ரசித்த ஒரு சூப்பர் ரைட் |
 |
அதிரடி சுரேஷ் 3 வெற்றிப்புள்ளிகள் |
போட்டியின் இறுதியில் திருமணம் ஆகாத கட்டிளம் காளைகள் அணி 20 வெற்றிப்புள்ளிகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடியது.
 |
வெற்றி வாகை சூடிய மகிழ்ச்சியில் |
 |
வெல்லட்டும் இந்த இளைஞர் படை |
ஒளிப்படங்கள். கண்ணன்
திறன் பேசி : தினேஷ்
No comments:
Post a Comment